Malaigal ellam valigal

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே
நிச்சயமாகவே முடிவு உண்டு
ஆபிரகாமின் தேவன் அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர்
நம்முடைய தேவன்
பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே
பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே
தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே

Design a site like this with WordPress.com
Get started